இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் அடுத்த உயர்ஸ்தானிகராக மேத்யூ டக்வொர்த் (Matthew Duckworth) நியமிக்கப்பட்டுள்ளதாக, அவுஸ்திரேலிய வெளிவிவகார மற்றும் வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது.
மேத்யூ டக்வொர்த், வெளிநாட்டு மற்றும் வர்த்தக துறையில் வல்லுநராகத் திகழ்வதோடு, அண்மையில் அமெரிக்க வர்த்தக பணிக்குழுவின் உதவி செயலாளராகவும், அவுஸ்திரேலியா–ஐரோப்பிய ஒன்றிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் துணைத் தலைமை பேச்சுவார்த்தையாளர் என்ற பதவியிலும் பணியாற்றியவர் ஆவார்.
இதே நேரத்தில், 2022 முதல் இலங்கையில் அவுஸ்திரேலியாவின் நலன்களை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய பதவியிலிருந்து விலகும் உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸனுக்கு நன்றி தெரிவித்துள்ளதாகவும், அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.