காஸாவைச் சுற்றி தொடர்ந்து நிலவும் மோதலுக்கு இடையே, 60 நாள் போர்நிறுத்தம் தொடர்பான திட்டத்தை முன்னிலைப்படுத்தி, ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் கட்டாரில் மறைமுக பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஹமாஸ் சில திருத்தங்களை முன்வைத்திருந்தாலும், இஸ்ரேல் அவற்றை நிராகரித்து, பேச்சுவார்த்தையைத் தொடரும் வகையில் இன்று கட்டாருக்கு ஒரு அதிகாரிகளின் குழுவை அனுப்பியுள்ளது.
போர் நின்று ஆயிரக்கணக்கான உயிர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கில், கட்டார், எகிப்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் தங்களின் மத்தியஸ்த முயற்சிகளை தொடர்ந்து முன்னெடுத்துவருகின்றன.
இந்நிலையில், எதிர்வரும் நாட்களில் போர்நிறுத்தத்தில் ஒரு முக்கிய திருப்புமுனை ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.