முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க மற்றும் மூன்று சந்தேக நபர்கள், ஜூலை 15ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இன்று (07) கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர்படுத்தியபின், நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.
துமிந்த திசாநாயக்க கடந்த மாதம், ஹேவ்லாக் சிட்டி பகுதியில் உள்ள வீட்டு வளாகத்தில் தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார்.