மக்கள் தொகை சரிவை சமாளிக்க, ரஷியாவில் புதிய மற்றும் சர்ச்சைக்குரிய அரசுத் திட்டமொன்று அறிமுகமாகியுள்ளது. கர்ப்பமான பள்ளி மாணவிகளுக்கு 1 லட்சம் ரூபாய்க்கும் மேற்பட்ட நிதி உதவியை வழங்க ரஷிய அரசு முடிவு செய்துள்ளது.
இந்தத் திட்டம் தொடக்கமாக நாட்டின் 10 மாகாணங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் நோக்கம், இளைய தலைமுறையிடையே பிறப்புகளை ஊக்குவிக்க வேண்டும் என்பதே என அதிகாரிகள் கூறுகின்றனர்.
முன்னணி காரணம் – மக்கள்தொகை வீழ்ச்சி:
ரஷியாவின் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 2023 ஆம் ஆண்டு ஒரு பெண்ணுக்கு 1.41 குழந்தைகள் என பதிவாகியுள்ளது. இது, மக்கள் பதிலீட்டு அளவான 2.05–இதை விடக் குறைவாகும்.
இதற்கு முன், கர்ப்பிணிப் பெண்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டம் செயலில் இருந்த போதும், அதனால் பெரும்பாலும் வயதான பெண்கள் மட்டுமே பயனடைந்தனர். இப்போது, அந்தத் திட்டம் பள்ளி மாணவிகளுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய கருத்துக்கணிப்பு:
இத்திட்டத்தை முன்னிட்டு, ரஷிய பொது கருத்து ஆராய்ச்சி மையம் (VTsIOM) நடத்திய டீனேஜ் கர்ப்பம் தொடர்பான கணக்கெடுப்பு முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளது. நாட்டின் சில பகுதிகளில் இளம்பெண்களிடையே கர்ப்பம் அதிகரிக்கும் நிலை இருந்தது என்பதே இந்நடவடிக்கையின் அடிப்படை காரணமாக கூறப்படுகிறது.
சர்ச்சைகள் எழும் சாத்தியம்:
இத்திட்டம், நிதி உதவியின் பெயரில் மாணவிகள் இடையே காலத்துக்கு முற்றிலும் எதிரான ஒரு தூண்டுதலை ஏற்படுத்தக்கூடும் என விமர்சகர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதனால், வன்முறை மற்றும் கல்வி விடயங்களில் எதிர்வினைகள் உருவாகும் வாய்ப்பு அதிகம் உள்ளது.