இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள 2025 ஜூன் மாதத்திற்கான வாராந்திர பொருளாதார சுட்டெண் அறிக்கையின் படி, ஜூன் 2025-இல் நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துகளின் மொத்த பெறுமதி 6,080 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
இதே பெறுமதி மே 2025-இல் 6,286 மில்லியன் டொலராக இருந்த நிலையில், கடந்த மாதத்தில் மட்டும் 206 மில்லியன் டொலர் வீழ்ச்சியடைந்து, 3.3% சதவீதக் குறைவு ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவிக்கிறது.
🔻 வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் – அந்நிய செலாவணிக் குறைவு
அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது:
“அந்நிய செலாவணி இருப்பு 6,231 மில்லியன் டொலரிலிருந்து 6,023 மில்லியன் டொலராகக் குறைந்ததே இந்த மொத்த வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாகும்.”
இந்த வீழ்ச்சி, நாட்டின் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துகளில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாதம் | உத்தியோகபூர்வ கையிருப்பு (USD மில்லியன்) |
---|---|
மே 2025 | 6,286 |
ஜூன் 2025 | 6,080 |
வீழ்ச்சி அளவு | 206 (≈ 3.3%) |