2025 ஆம் ஆண்டின் ஜனவரி 1ஆம் திகதியிலிருந்து ஜூலை 11ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 66 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இவ்வாறான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 37 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 37 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவங்களில் 48க்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூட்டுகள் பாதாள உலகக் குழுக்களுக்கு இடையிலான மோதல்களின் விளைவாக இடம்பெற்றதாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.
பணந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் மட்டும் 5 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இவை, பாதாள உலக உறுப்பினர்களும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுமாகக் கருதப்படும் “குடு சலிந்து” மற்றும் “பாணந்துறை நிலங்க” ஆகியோருக்கிடையிலான ஆணவக் குழப்பங்களால் உருவான மோதல்களின் விளைவாக பதிவாகியுள்ளதாகவும், இதனால் குறித்த பிரதேசத்தில் அதிக அளவிலான துப்பாக்கிச் சூட்டுகள் இடம்பெறுவதாகவும் பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.