follow the truth

follow the truth

July, 16, 2025
HomeTOP1NPP-க்கு ஆதரவளித்த பேருவளை SJB உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தம்

NPP-க்கு ஆதரவளித்த பேருவளை SJB உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தம்

Published on

பேருவளை நகர சபையின் மேயர் மற்றும் உப மேயர் தெரிவின் போது தேசிய மக்கள் சக்திக்கு (NPP) ஆதரவளித்ததற்காக, ஐக்கிய மக்கள் சக்தி (SJB) சார்ந்த ஆறு உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

SJB பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ கடிதத்தின் மூலம், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மேயர் பதவிக்கு NPP வேட்பாளருக்கு ஆதரவு வழங்கிய இந்த 6 உறுப்பினர்களும், கட்சியின் தீர்மானங்களை மீறியதற்காக பதவித் தகுதியை இழக்கக்கூடிய நிலை உருவாகியுள்ளதாகவும் கட்சித் தலைமையகம் வலியுறுத்தியுள்ளது.

இந்த முடிவுக்கு எதிராக, பாதிக்கப்பட்ட உறுப்பினர்கள் சட்ட நடவடிக்கைகள் எடுக்கவுள்ளனர் எனவும், நகர சபை நிர்வாகத்தில் இதன் தாக்கம் விரைவில் தெளிவாகும் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காட்டு யானைகளை சுடுவதற்கு எதிரான சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தல்

காட்டு யானைகள் மீதான துப்பாக்கிச் சூட்டுக்கு எதிரான சட்டங்களை கடுமையாக்கும் நோக்கில், வனவிலங்கு திணைக்களத்தின் அதிகாரிகளுடன் இன்று (15)...

பரிந்துரைகளை செயல்படுத்தத் தவறும் அரச அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்

தமது நிறுவனம் வழங்கும் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாவிட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை மனித...

அமெரிக்கா தீர்வை வரி குறித்து கலந்துரையாட அமெரிக்கா செல்லவுள்ள இலங்கை பிரதிநிதிகள் குழு

அமெரிக்காவின் தீர்வை வரி குறித்து கலந்துரையாடல் மேற்கொள்வதற்காக இலங்கை பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் 18 ஆம் திகதி அமெரிக்கா...