தாய்லாந்து மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளுக்கு இடையில் எல்லை மோதல்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், கம்போடியாவின் எல்லையில் உள்ள பகுதிகளில் தாய்லாந்து இராணுவச் சட்டத்தை அமுல்படுத்துவதாக அறிவித்துள்ளது.
கம்போடியாவின் எல்லையில் உள்ள தாய்லாந்தின் 8 மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (25) முதல் இராணுவச் சட்டத்தை அமுல்படுத்துவதாக தாய்லாந்து இராணுவம் அறிவித்துள்ளது.
இதற்கிடையில், கம்போடியாவுடனான எல்லை மோதல்களில் பலர் உயிரிழந்துள்ளதாகவும் இது யுத்தமாக மாறக்கூடும் என்றும் தாய்லாந்தின் தற்காலிக பிரதமர் பும்தம் செச்சாயாசாய் எச்சரித்துள்ளார்.