ஓட்சில் இரும்பு சத்து, மெக்னீஷியம் உட்பட பல விதமான புரத சத்துகள் உள்ளன. கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும். உடல் எடையை குறைக்கும். ரத்த அழுத்தம், நீரிழிவை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். இதே காரணத்தால், பலரும் காலை, மாலை டிபனுக்கு இதை பயன்படுத்துகின்றனர்.
ஓட்ஸ் இட்லி, தோசை, உப்புமா செய்வர். இதில் சூப்பரான மசாலா வடையும் செய்யலாம். இது மிகவும் சுவையானது மட்டுமல்ல, ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.
செய்முறை முதலில் பாசிப்பருப்பு மற்றும் ஓட்சை, தனித்தனியாக நீரில் ஊற வைக்கவும். அதன்பின் பாசிப்பருப்பை தண்ணீர் சேர்க்காமல் மிக்சியில் போட்டு அரைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் ஓட்ஸ், மிளகாய் துாள், உப்பு, சிறிது எண்ணெய், சிறிதாக வெட்டிய வெங்காயம், கொத்துமல்லி தழை, பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து கையால் பிசையவும். அதன்பின் அரைத்து வைத்துள்ள பாசிப்பருப்பையும் சேர்க்கவும். தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக பிசையவும். வடை மாவு பதத்தில் இருக்க வேண்டும்.
அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றவும். காய்ந்த பின் மாவை, வடைகளாக தட்டி, எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக பொறித்து எடுக்கவும். புதினா சட்னி அல்லது தக்காளி சாஸ் தொட்டு கொண்டால், பொருத்தமாக இருக்கும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.