தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே எல்லை தாண்டிய பிரச்சினை கடந்த இரண்டு நாட்களாக நீடித்து வரும் நிலையில், இருநாடுகளிலும் வசிக்கும் இந்தியர்களுக்கு இந்தியா அறிவுரை வழங்கியுள்ளது.
தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே எல்லை தாண்டிய பிரச்னை கடந்த இரண்டு நாட்களாக நீடித்து வரும் நிலையில், வசிக்கும் இந்தியர்களுக்கு இந்தியா அறிவுரை வழங்கியுள்ளது.
கம்போடியாவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”கம்போடியா-தாய்லாந்து எல்லையில் பிரச்னை நடந்து வரும் நிலையில், கம்போடியாவில் வசிக்கும் இந்தியர்கள் இருநாட்டு எல்லைப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்” என கூறப்பட்டுள்ளது.
முன்னதாக கம்போடியாவுடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் 8 மாவட்டங்களில் தாய்லாந்து அவசர நிலையை பிரகடனப்படுத்தி , ராணுவ ஆட்சியை அமல்ப்படுத்தியுள்ளது.
இந்த மாவட்டங்களில் உள்ள 7 சுற்றுலாத்தலங்களுக்கு செல்ல வேண்டாம் என இந்தியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
வியாழனன்று இரு நாடுகளுக்கிடையே மோதல் தொடங்கியது முதல் 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 10,000க்கும் அதிகமானோர் வீடுகளைவிட்டு வெளியேறியுள்ளனர்.