வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள எதிர்வுகணிப்பு அறிக்கையில், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இடைவிடா மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகள், வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் மணிக்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசும் வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த பலத்த காற்று காரணமாக ஏற்படும் அபாயங்களை தவிர்க்கும் வகையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.