தற்போதைய வெப்பமான வானிலை காரணமாக வெளிப்புற நடவடிக்கைகளின் போது ஏற்படக்கூடிய நீரிழப்பைத் தடுக்க அதிக தண்ணீர் குடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மருத்துவ நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்திருந்தார்.
வெப்பமான வானிலை நிலைமைகளுடன் தோல் நோய்களும் அதிகரிக்கக்கூடும் என்று அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலைமைகளைத் தடுக்க அதிக தண்ணீர் குடிக்கவும் திரவ உணவுகளை உட்கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மருத்துவ நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில், இன்று நாட்டின் பல பகுதிகளில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை “எச்சரிக்கை” மட்டத்தில் இருப்பதாக வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது.
அதன்படி, வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் வெப்ப நிலைமை “எச்சரிக்கை” மட்டத்தில் தொடரக்கூடும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.