follow the truth

follow the truth

July, 8, 2025
HomeTOP1கட்டணத்தை செலுத்தாதவர்களுக்கு நீர் விநியோகம் துண்டிப்பு!

கட்டணத்தை செலுத்தாதவர்களுக்கு நீர் விநியோகம் துண்டிப்பு!

Published on

ஆறு மாதங்கள் அல்லது அதற்கும் மேலாக நீர் விநியோக கட்டணத்தை செலுத்தாதவர்களுக்கு நீர் விநியோகத்தை துண்டிக்கும் செயற்பாடு மாவட்ட மட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் 7,200 மில்லியன் ரூபாவை நீர் பாவனையாளர்கள் செலுத்தத் தவறியுள்ளதாகவும், ஆறு மாதங்கள் அல்லது 2000 ரூபாய்க்கு மேல் நிலுவையாகவுள்ள நீர் பட்டியலுக்கான நீர் விநியோகத்தை துண்டிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சபையின் உதவிப் பொது முகாமையாளர் ஏகநாயக்க வீரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

27 இலட்சத்து 50,000 பேருக்கு மாதந்தம் 50 மில்லியன் கனமீட்டர் குடிநீரை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை வழங்குகிறது.

மேலும் 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 2,100 மில்லியன் ரூபாயாக இருந்த நிலுவைக் கட்டண தொகையை செலுத்தாமையினால், டிசம்பர் மாதமளவில் அத்தொகை 7,200 மில்லியன் ரூபாயாக உயர்ந்துள்ளது.

மாதாந்த குடிநீர் கட்டணத்தை 14 நாட்களுக்குள் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு அடுத்த மாத பில்லில் 1.5 சதவீத தள்ளுபடியும், பணம் செலுத்த தாமதப்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு மாதாந்த பில்லில் 2.5 சதவீதம் தாமதக் கட்டணமும் அறவிடப்படும் என்று உதவி பொது முகாமையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஆயுதப்படையினருக்கு ஜனாதிபதி அழைப்பு

நாடளாவிய ரீதியில் பொது அமைதியை நிலைநாட்டுமாறு அனைத்து ஆயுதம் தாங்கிய படையினருக்கும் அழைப்பு விடுத்து ஜனாதிபதி அநுர குமார...

இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம் [LIVE]

இன்றைய (ஜூலை 8) பாராளுமன்ற அமர்வு, சபாநாயகர் தலைமையில் வழமைபோல் ஆரம்பமாகியுள்ளது. நாளைய முக்கிய செயல்முறைகள் பின்வருமாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளன: 🔹...

2027 முதல் சொத்து வரி அறிமுகம் – சர்வதேச நாணய நிதியம் தகவல்

2027 ஆம் ஆண்டு முதல் சொத்து வரி ஒன்று அறிமுகப்படுத்தப்படும் என சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது. இந்த...