follow the truth

follow the truth

July, 5, 2025
Homeஉள்நாடுகைதிகளுக்கு மறுவாழ்வு : இலங்கையில் புதிய 'ஸ்பீட் போர்ஸ்' படையணி உருவாக்கம்

கைதிகளுக்கு மறுவாழ்வு : இலங்கையில் புதிய ‘ஸ்பீட் போர்ஸ்’ படையணி உருவாக்கம்

Published on

இலங்கையின் சிறைச்சாலைகளில் ஊழல் மற்றும் முறைகேடுகளை சமாளிக்க முன்னாள் முப்படை வீரர்களை உள்ளடக்கிய 500 பேர் கொண்ட “ஸ்பீட் படையணி” (SPEAT Force) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அவசர நடவடிக்கை மற்றும் தந்திரோபாயப் படை “Sri Lanka Prisons Emergency Action and Tactical Force” (SPEAT Force) என்ற பெயரில், இதன் முதல் குழுவின் 194 பேர் நான்கு மாத நீண்ட பயிற்சிகளை முடித்துக்கொண்டு நேற்று அங்குனகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் இருந்து வெளியேறினர்.

சிறைக் கைதிகளைக் கையாளும் போது சுய ஒழுக்கத்துடன் வலுவூட்டப்பட்ட மனிதாபிமான அணுகுமுறையுடன் இந்த படையினர் தமது பணிகளை மேற்கொள்வர்.

அத்துடன் சிறை தண்டனை முடிந்து மீண்டும் சமூகத்திற்குள் நுழையும் முன், கைதிகளை பயனுள்ள குடிமக்களாக மாற்றுவது இந்த படையணியின் கடமையாகும் என்று பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஹரக் கட்டா மருத்துவமனையில் அனுமதி

'ஹரக் கட்டா' என அழைக்கப்படும் பிரபல பாதாள உலக உறுப்பினரான நதுன் சிந்தக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

கட்டுநாயக்க விமான நிலையத்தில் VAT Refund முன்னரங்கம்

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளின் இலங்கைக்குள் பொருட்களை கொள்வனவு...

வத்தளை, ராகம, ஜா-எல பகுதிகளில் சோதனை – 300க்கும் மேற்பட்டோர் கைது

கந்தானை, ஜா-எல, வத்தளை மற்றும் ராகம பகுதிகளில் நேற்று (04) மேற்கொள்ளப்பட்ட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் சட்டவிரோத போதைப்பொருள்...