follow the truth

follow the truth

July, 1, 2025
Homeஉள்நாடுஜீ.எல். பீரிஸ் - எஸ். ஜெய்சங்கர் சந்திப்பு

ஜீ.எல். பீரிஸ் – எஸ். ஜெய்சங்கர் சந்திப்பு

Published on

இந்தியாவிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கரை இன்று சந்தித்தார்.

இதுகுறித்து ட்விட்டர் பதிவொன்றின் மூலம் அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், மிகவும் வினைத்திறனாக இந்த பேச்சுவார்த்தை அமைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை – இந்திய ராஜதந்திர உறவின் 75 ஆம் ஆண்டு பூர்த்தியைப் பொருத்தமான முறையில் அனுஷ்டிக்கவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

பொருளாதாரத்தை சக்திமயப்படுத்தல், அதற்காக சுற்றுலாத்துறையை மேம்படுத்தல் போன்ற விடயங்கள் தொடர்பாக விரிவாக அவதானம் செலுத்தப்பட்டது.

அத்துடன் இலங்கை – இந்திய மீனவர்கள் பிரச்சினை குறித்தும் கலந்துரையாடப்பட்டதாகவும், இந்த விடயத்தில் இரண்டு தரப்புக்கும் இடையிலான பரஸ்பர பொறிமுறை ஒன்றை விரைவில் கொண்டுவர வேண்டும் என இணங்கப்பட்டதாகவும் எஸ். ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பரேட் சட்டம் மீண்டும் அமுலுக்கு

பரேட் சட்டம் (Parate Law) மீண்டும் நடைமுறைக்கு வரவுள்ளதன் விளைவாக, நாட்டில் சுமார் 4 மில்லியன் பேர் வேலைவாய்ப்பை...

பேருந்து கட்டண மாற்றம் குறித்து இரண்டு நாட்களுக்குள் தீர்மானம்

எரிபொருள் விலை மாற்றத்தையடுத்து, பேருந்து கட்டணங்கள் தொடர்பான திருத்தம் குறித்து அடுத்த இரண்டு நாட்களுக்குள் தீர்மானிக்கப்படும் என தேசிய...

கஹவத்தையில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி

கஹவத்தையிலுள்ள வீடொன்றிலிருந்து இருவரை குழுவொன்று கடத்திச் சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவர் (22) உயிரிழந்துள்ளதுடன் மற்றையவர்...