follow the truth

follow the truth

May, 14, 2025
Homeஉள்நாடுநாடு முழுவதும் அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துங்கள்

நாடு முழுவதும் அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துங்கள்

Published on

தேசிய திட்டத்திற்கு அமைவாக கொழும்பு உட்பட நாடு முழுவதும் அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நகர மற்றும் வீடமைப்பு அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அலரிமாளிகையில் நேற்று நடைபெற்ற நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் செயற்படும் நகர்ப்புற மீளுருவாக்கத் திட்டம் மற்றும் கொழும்பு நகர்ப்புற மறுசீரமைப்பு திட்டத்திற்கான ஆதரவுத் திட்டம் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தின்போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.

பிரதானமாக கொழும்பிலுள்ள குறைந்த வசதி கொண்ட குடியிருப்புகளை அடுக்கு மாடி குடியிருப்புகளாக மாற்றுவதே பிரதான நோக்கமாகும். இதன்படி, 14,611 வீடுகள் ஏற்கனவே பொதுமக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் மேலும் 5590 வீடுகள் தற்போது நிர்மாணிக்கப்பட்டு வருவதாகவும் கலாநிதி எம்.எம்.எஸ்.எஸ்.பி யாலேகம பிரதமரிடம் தெரிவித்தார்.

குருநாகல் வில்கொடவில் செயற்படுத்தப்பட்டுவரும் குறைந்த வருமானம் பெறுவோருக்கான 300 வீட்டுத் திட்டப் பணிகள் குறித்து பிரதமர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

மேலும், சீன மானியத்தின் கீழ் 1996 வீடுகள் கிடைத்துள்ளதாகவும், தெமட்டகொட, பேலியகொட, மொரட்டுவ, மஹரகம மற்றும் கொட்டாவ ஆகிய பகுதிகளில் இந்த வீட்டுத் திட்டங்கள் நிர்மாணிக்கப்பட உள்ளதாகவும் உதய நாணயக்கார தெரிவித்தார்.

2024ஆம் ஆண்டுக்குள் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கான இந்தத் திட்டங்கள் அனைத்தையும் நிறைவுசெய்ய திட்டமிடுமாறு நகர்ப்புற அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் என்ற வகையில் பிரதமர் அறிவுறுத்தினார்.

ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் உதவியுடன் கொழும்பில் ஆப்பிள் தோட்டம் மூன்று கட்டங்களின் கீழ் நிர்மாணிக்கப்படும் 400 வீடுகள், கிம்புலாஎலயில் 472 வீடுகள் மற்றும் மஹரகமவில் 600 வீடுகள் நிர்மாணிக்கப்படுதல் உட்பட பல திட்டங்கள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
சிரேஷ்ட கலைஞர்களுக்கான வீட்டுத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறதா என நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளிடம் பிரதமர் கேட்டறிந்தார்.

6-7 மில்லியன் ரூபாய் பெறுமதியான புதிய வீட்டிற்காக குறைந்த வருமானம் பெறுபவர்களிடமிருந்து தற்போது அறவிடப்படும் கட்டணம் சுமார் 1 மில்லியன் ரூபாவாகும் எனவும், அந்தத் தொகை 30 வருடங்களுக்கு மாதாந்தம் 3000 ரூபாவாகவே அறவிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

வீடமைப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது குத்தகை அடிப்படையில் வாடகை செலுத்தும் குடியிருப்பாளர்களுக்கும் வீடுகள் வழங்கப்பட வேண்டுமென இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.

‘நகர்ப்புறங்களில் 20-30 வருடங்களாக வாடகைக்கு குடியிருப்பவர்கள் உள்ளனர். ஒரு வீட்டை இரண்டாகப் பிரித்து குடியிருப்பவர்களும் உண்டு. குழந்தைகளை பிரதான பாடசாலைகளுக்கு இணைத்துக் கொள்வதற்காக சிலர் இவற்றை செய்கின்றனர். எனவே, முறைசாரா குடியிருப்புகளை அகற்ற வேண்டுமாயின், இந்த வாடகைக்கு குடியிருப்பவர்களுக்கும் வீட்டுத் திட்டங்களில் குறைந்தபட்சம் 10 சதவீதத்தை வழங்க வேண்டும். அதற்கான அளவுகோல்களை அமைச்சு வகுத்து அமைச்சரவையின் ஒப்புதலுக்கு சமர்ப்பிப்பது பயனுள்ளதாக அமையும் என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வீதி பராமரிப்பு – ரயில் பாதைக்கு தற்காலிக பூட்டு

களனிவெளி ரயில் மார்கத்தில், பேஸ்லைன் வீதி மற்றும் நாரஹேன்பிட்டி ரயில் நிலையங்களுக்கு இடையிலான வீதி பராமரிப்புக்காக தற்காலிகமாக மூடப்படும்...

ரம்பொடையில் வேன் வீதியை விட்டு விலகி விபத்து – 11 பேருக்குக் காயம்

ரம்பொடவில் பாடசாலை ஒன்றுக்கு அருகில் வேன் ஒன்று கவிழ்ந்து இன்று (14) ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த 12 பேர்...

கெஹெலியவிற்கு எதிரான வழக்கிற்கு மூவரடங்கிய நீதிபதிகள் குழாம்

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மருந்து கொடுக்கல் - வாங்கல் தொடர்பான வழக்கிற்கு மூவரடங்கிய...