follow the truth

follow the truth

May, 15, 2025
Homeஉள்நாடுபல்கலைக்கழகங்களை முழுமையாக ஆரம்பிக்க முடியாது

பல்கலைக்கழகங்களை முழுமையாக ஆரம்பிக்க முடியாது

Published on

பெரும்பாலான பல்கலைக்கழக மாணவர்கள் விடுதிகளில் தங்கி கற்றல் நடவடிக்கையினை முன்னெடுத்து வரும் நிலையில், கொரோனா வைரஸ் பரவும் அச்சுறுத்தல் காரணமாக நாட்டின் அனைத்து பல்கலைக்கழக நடவடிக்கைகளையும் முழுமையாக ஆரம்பிப்பதற்கான திகதியினை உறுதியாக அறிவிக்க முடியாது என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், பல்கலைக்கழக செயற்பாடுகள் தற்போது 50 வீதம் மாத்திரம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்டபேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, ஶ்ரீ ஜயவர்தனபுரபல்கலைக்கழகத்தில் மாத்திரம் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந் நிலையில், அனைத்து பல்கலைக்கழகங்களின் செயற்பாடுகளையும் உடனடியாக முழுமையாக ஆரம்பிப்பது நடைமுறை சாத்தியமற்றது எனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வீதி விபத்துகளைக் குறைக்க கடுமையான சட்டங்கள் அமுலாக்கப்படும்

வீதி விபத்துகளைக் குறைக்க கடுமையான விதிகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால கூறுகிறார். தற்போதுள்ள...

சட்டவிரோதமாக உர மோசடியில் ஈடுபட்ட 12 பேர் கைது

பொலன்னறுவையில் மோசடி உரவிற்பனையில் ஈடுபட்ட 12 பேர் பொலிஸாரினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலன்னறுவை ஶ்ரீபுர பிரதேசத்தில் இந்தச்...

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலம் இன்று

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26...