இம்முறை உயர்தர பரீட்சைக்கு தோற்றியுள்ள மாணவர்களின் பெறுபேறுகளை விரைவில் வெளியிட்டு, பல்கலைக்கழகத்திற்கு பிரவேசிக்கும் காலத்திற்கான காலதாமதத்தை குறைக்க நடவடிக்கை எடுப்பதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
அத்துடன், இம்முறை 5ம் தர புலமை பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் பெறுபேறுகளை எதிர்வரும் சில தினங்களில் வெளியிட நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.