follow the truth

follow the truth

May, 11, 2025
Homeஉள்நாடுவேட்புமனுவில் இளைஞர்களுக்கு 25 வீதம் ஒதுக்கீடு : தனிநபர் சட்டமூலம் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைப்பு

வேட்புமனுவில் இளைஞர்களுக்கு 25 வீதம் ஒதுக்கீடு : தனிநபர் சட்டமூலம் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைப்பு

Published on

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் அவர்களால் தனி நபர் சட்ட மூலமாக குறித்த சட்ட மூலம் சமர்ப்பிக்கப்பட்டிருந்ததோடு, அடுத்த கட்ட முன்னேற்ற நடவடிக்கைக்கு பாராளுமன்ற செயலாளர் நாயகத்தால் குறித்த திருத்த சட்டமூலத்திற்கான சட்ட ஏற்பாடுகளை கோரி சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம், 01.1946 ஆம் ஆண்டின் 53 ஆம் இலக்க உள்ளூராட்சி அதிகார சபைகள் தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தின் 28 ( 8 ) ( ஆ ) பிரிவு, 2. 1981 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 15 ( 8 ) ( இ ) பிரிவு,மற்றும், 03. 1988 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க மாகாண சபைத் தேர்தல்கள் சட்டத்தின் 13 ( 8 ) ( இ ) பிரிவுகள் என்பனவற்றை திருத்தி புதிய ஏற்பாடுகளை உள்ளீர்ப்பதற்கான சட்ட ஏற்பாடுகளை கோரி சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
புதிய சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய மேற்கூறிய சகல தேர்தல்களின் போதும் நியமனப் பத்திரத்தைச் சமர்ப்பிக்கும்போது தேர்தல் மாவட்டத்துக்கு பெயர் குறித்து நியமிக்கப்படும் வேட்பாளர்களின் மொத்த எண்ணிக்கையில் நான்கில் ஒரு பகுதியினருக்குக் குறையாமல் இளைஞர் வேட்பாளர்களாக இருப்பதை ஒவ்வோர் அரசியற் கட்சியும் அல்லது சுயேட்சைக் குழுவும் உறுதிப்படுத்தல் வேண்டும்.
தேர்தல்கள் ஆணையாளரால் வர்த்தமானியில் வெளியிடப்படும் அறிவித்தல் மூலம் பெயர் நியமனங்களைக் கோரும் அதேவேளையில் ஒவ்வொரு நிர்வாக மாவட்டம் தொடர்பாகவும் பெயர் குறித்து நியமிக்கப்படவேண்டிய இளைஞர் வேட்பாளர்களின் எண்ணிக்கையைக் குறித்துரைக்கப்பட வேண்டும், ஒரு இளைஞர் என்பவர் தேர்தல்கள் ஆணையாளரினால் தேர்தல்கள் கோரப்படும் தினத்தில் 35 அல்லது அதற்குக் குறைவான வயதான ஒரு ஆண் அல்லது பெண் என வரையறுக்கப்படுதல் வேண்டும்.
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சந்தையில் முட்டையின் விலை வீழ்ச்சி

சந்தையில் முட்டையின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். இதன்படி, பல பகுதிகளில் முட்டையின் விலை 20 ரூபாய் முதல் 24...

ரம்பொட – கெரண்டிஎல்ல விபத்து – பலி எண்ணிக்கை 21ஆக உயர்வு (VIDEO)

ரம்பொட – கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி, விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...

இலங்கை மின்சார சபையின் தலைவர் இராஜினாமா

இலங்கை மின்சார சபையின் தலைவர் பதவியை திலக் சியம்பலாபிட்டிய இராஜினாமா செய்துள்ளார். அதற்கமைய, தனது இராஜினாமா கடிதத்தை எரிசக்தி அமைச்சகத்திடம்...