ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்றைய தினம் அமைச்சரவையில் மறுசீரமைப்பை மேற்கொண்டதுடன் இன்றும் அமைச்சரவையில் மாற்றங்கள் ஏற்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனடிப்படையில் தற்போது வெற்றிடமாக உள்ள போக்குவரத்து அமைச்சர் பதவியில் திலும் அமுனுகம நியமிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
அத்துடன் கமத்தொழில் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவுக்கு காணி அமைச்சு பதவியும், காணி அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவுக்கு கமத்தொழில் அமைச்சு பதவியும் வழங்கப்படவுள்ளது.
விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவிகளில் இருந்து நேற்று நீக்கப்பட்டனர்.
இதனையடுத்து திலும் அமுனுகமவுக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவியை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.