ஓமானுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி

578

ஏழாவது ஐ.சி.சி இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், உலகக்கிண்ண தொடருக்கு முன்னதாக இலங்கை கிரிக்கெட் அணியானது ஓமான் நாட்டுக்கு இருதரப்பு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 சர்வதேச தொடரில் விளையாடவுள்ளது.

இலங்கை அணி ஓமான் அணியுடன் இரு போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 சர்வதேச தொடரில் விளையாடவுள்ளது குறித்த இரண்டு போட்டிகளானது ஒக்டோபர் 7 மற்றும் 9ஆம் திகதிகளில் எமிரேட்டில் அமைந்துள்ள ஓமான் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here