follow the truth

follow the truth

July, 4, 2025
Homeஉள்நாடுஆயுதப்படையினர்கள் எப்போதும் அரசியலமைப்பிற்கு உட்பட்டே செயற்படுவார்கள்

ஆயுதப்படையினர்கள் எப்போதும் அரசியலமைப்பிற்கு உட்பட்டே செயற்படுவார்கள்

Published on

ஆயுதப்படையினர்கள் எப்போதும் அரசியலமைப்பிற்கு உட்பட்டு செயற்படுவார்கள் என பாதுகாப்பு படைகளின் பிரதானியும் இராணுவ தளபதியான் ஜெனரல் சவேந்திர  சில்வா தெரிவித்தார்.

இலங்கையில் உள்ள வெளிநாட்டு உயர்ஸ்தானிகராலயங்கள் மற்றும் தூதரகங்களின் பாதுகாப்பு ஆலோசகர்கள் மற்றும் இணைப்பாளர்களை, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இராணுவத் தளபதி நேற்று சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது, ஜெனரல் சில்வா, நாட்டின் தற்போதைய நிலவரங்கள் குறித்து வெளிநாட்டு தூதரக அதிகாரிகளுக்கு விளக்கமளித்ததாக கூறப்படுகிறது.

மேலும் நாட்டின் பாதுகாப்பிற்காக ஆயுதப்படை எப்போதும் செயற்படுவதாக இராணுவத் தளபதி பாதுகாப்பு ஆலோசகர்களிடம் தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடலில் அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, அவுஸ்ரேலியா, ஜப்பான், சீனா, இந்தியா, ஈரான், பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளின் தூதரகங்களின் பாதுகாப்பு ஆலோசகர்கள் கலந்து கொண்டனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாராளுமன்ற உறுப்பினராக முகம்மது சரிவு அப்துல் வாஸித் நியமனம்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் முகம்மது சாலி நழீம் சுய விருப்பின் அடிப்படையில் பதவியை இராஜினாமா...

கடந்த 6 மாதங்களில் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் வருகை

2025 ஜூன் மாதம் இறுதிக்குள் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை...

அஸ்வெசும – மேலும் 9 இலட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்

அஸ்வெசும திட்டத்தின் கீழ் 1.8 மில்லியன் மக்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும் 9 இலட்சம் பேர் இதற்கு விண்ணப்பித்துள்ளனர்...