அமைச்சரவையின் தீர்மானத்துக்கு அமைய வெளிநாடுகள் சிலவற்றில் அமைந்துள்ள தூதரகங்களை தற்காலிகமாக மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி நோர்வேயின் ஒஸ்லோ நகரிலுள்ள தூதரகம், ஈராக்கின் பக்தாத் நகரிலுள்ள தூதரகம், அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரிலுள்ள துணைத் தூதரகம் ஆகியவற்றை எதிர்வரும் ஏப்ரல் 30 ஆம் திகதி முதல் மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.