ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் குழுக் கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை மே 13 இடம்பெறவுள்ளது. கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் விசேட கூட்டம் கட்சித் தலைமையகத்தில் இடம்பெறவுள்ளது.
இதேவேளை, ரணிலுக்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது குறித்து கட்சி இன்று தீர்மானிக்கும் என கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.