follow the truth

follow the truth

July, 3, 2025
Homeஉள்நாடுவழமைக்கு திரும்பிய பொது போக்குவரத்து சேவை

வழமைக்கு திரும்பிய பொது போக்குவரத்து சேவை

Published on

நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் இன்று(17) அதிகாலை 5 மணியளவில் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், பொதுப் போக்குவரத்து சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதனடிப்படையில், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்கள் சேவையில் ஈடுபட்டுள்ளதாக உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை, மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், எரிபொருள் நெருக்கடி காரணமாக சேவையில் இணைக்கப்பட்டுள்ள பஸ்களின் எண்ணிக்கையில் கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இதனிடையே, அலுவலக மற்றும் ஏனைய ரயில் சேவைகள் வழமையான நேர அட்டவணையின் படி இயங்குவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதுவரை 12 ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் போக்குவரத்து அத்தியட்சகர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

ஊரடங்குச் சட்டத்துடன், ஊழியர்களை பணிக்கு அழைப்பதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் காரணமாக சில ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாராளுமன்ற உறுப்பினராக முகம்மது சரிவு அப்துல் வாஸித் நியமனம்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் முகம்மது சாலி நழீம் சுய விருப்பின் அடிப்படையில் பதவியை இராஜினாமா...

கடந்த 6 மாதங்களில் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் வருகை

2025 ஜூன் மாதம் இறுதிக்குள் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை...

அஸ்வெசும – மேலும் 9 இலட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்

அஸ்வெசும திட்டத்தின் கீழ் 1.8 மில்லியன் மக்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும் 9 இலட்சம் பேர் இதற்கு விண்ணப்பித்துள்ளனர்...