follow the truth

follow the truth

July, 3, 2025
HomeUncategorizedசலுகை விலையில் எரிபொருள் வழங்கப்படமாட்டாது - எரிசக்தி அமைச்சர்

சலுகை விலையில் எரிபொருள் வழங்கப்படமாட்டாது – எரிசக்தி அமைச்சர்

Published on

எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினர்களும் சலுகை விலையில் எரிபொருள் வழங்கப்படமாட்டாதென மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர், சமூகத்தில் தவறான கருத்தொன்று பரவி வருகிறது.

இது நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்துவதாக உள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சந்தை விலைக்கு குறைவான விலையில் எரிபொருள் வழங்கப்படுவதில்லை. வழங்கப்போவதும் இல்லை.

நாடாளுமன்ற வாரத்தில் நாடாளுமன்றுக்கு வருகைதரும் உறுப்பினர்களுக்கு எரிபொருளை பெற்றுக்கொள்ள வழிவகைகளை ஏற்படுத்தி தருவது தொடர்பில் அண்மையில் சபாநாயகரினால் காவல்துறைமா அதிபரிடம் கோரிக்கையொன்று விடுக்கப்பட்டிருந்தது.

காவல்துறை தரிப்பிடங்களில் உள்ள எரிபொருள் நிலையங்கள் ஊடாக வெளியார் எவருக்கும் எரிபொருள் வழங்கப்படுவதில்லை. 

காவல்துறை அதிகாரிகளுக்கு மாத்திரமே பணம் அறவிடாமல் லீற்றர் அடிப்படையில் நாரஹேப்பிட்டி காவல்துறை நிரப்பு நிலையத்தில் எரிபொருள் வழங்கப்படுகிறது.

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் கட்டணம் செலுத்தியே குறித்த எரிபொருள் காவல்துறையினரால் பெறப்படுகிறது.

சபாநாயகர் காவல்துறைமா அதிபரிடம் முன்வைத்த கோரிக்கையையடுத்து, காவல்துறைமா அதிபர் கேட்டுக்கொண்டதற்கிணங்க சந்தை விலையில், கட்டணம் அறவிட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எரிபொருள் வழங்க அவர்களுக்கு பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எழுத்துமூல அனுமதி வழங்கியது.

சந்தையில்  பெற்றோல் 334 ரூபாவுக்கும், ஒட்டோ டீசல் 289 ரூபாவுக்கு வழங்கப்படுகிறது.

நிரப்பு நிலையங்களில் அத்தியாவசிய சேவை வாகனங்களை தவிர ஏனைய வாகனங்களுக்கு ஆகக்கூடியது 8000 ரூபாவுக்கே எரிபொருள் வழங்கப்படுகிறது.

அத்துடன், ஏனைய வாகனங்களுக்கான எரிபொருள் வழங்கல் வரம்பும் அமுலில் உள்ளது.

காவல்துறையினரும் அதற்கு ஏற்றவாறே ஏனையோருக்கு எரிபொருள் வழங்கியிருக்க வேண்டும்.

எனினும், காவல்துறை தரிப்பிடத்தில் பாரிய தவறு இழைக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வருடங்களாக குறித்த எரிபொருள் பம்பியில் கட்டணங்கள் இற்றைப்படுத்தப்பட்டிருக்கவில்லை.

அதில், 121 ரூபா எரிபொருள் கட்டணமாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, உடனடியாக எரிபொருள் வழங்கலை நிறுத்துமாறு நாம் அவர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளோம்.

இவ்வாறு கட்டணங்கள் இற்றைப்படுத்தாமை தொடர்பில் உடனடியாக விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஏனைய அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் என எவறாக இருந்தாலும், அவர்களுக்கு மானிய விலையில் ஒருபோதும் எரிபொருள் வழங்கப்படமாட்டாதென அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜூலை மாதத்திற்கான சமையல் எரிவாயு விலைகள் எதிலும் மாற்றமில்லை

லிட்ரோ மற்றும் லாப் எரிவாயு நிறுவனங்கள், ஜூலை மாதத்திற்கான சமையல் எரிவாயு விலைகள் எதிலும் மாற்றமில்லை என அறிவித்துள்ளன. 🔹...

காமெய்னி கொலைக்கு அமெரிக்காவின் அனுமதி தேவையில்லை – இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் பரபரப்பு பேட்டி

ஈரானுடனான 12 நாள் போரின் போது, அந்நாட்டின் அதிஉயர் தலைவர் ஆயதுல்லா அலி காமெய்னியை கொலை செய்ய குறிவைத்ததாக...

பாடசாலை டெங்கு ஒழிப்பு தினமாக ஜூலை 09 ஆம் திகதி பிரகடனம்

பரவிவரும் டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்களின் பரவலைக் குறைக்கும் நோக்கில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும்...