follow the truth

follow the truth

July, 30, 2025
Homeஉள்நாடுவழமைக்கு திரும்பிய சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய பணிகள்

வழமைக்கு திரும்பிய சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய பணிகள்

Published on

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு வழமைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

அதன்படி சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நிலையத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடந்த மார்ச் 20ஆம் திகதி மூடப்பட்ட சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலைய பணிகள் இந்த வாரம் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், தொழில்நுட்ப கோளாறினால் அதன் பணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தது.

இதேவேளை, எரிபொருள் விநியோகம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகே தொடர்ந்தும் வரிசைகள் காணப்படுவதாக  செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மீனவ சமூகத்திற்கான பாதுகாப்பு வலை – புதிய காப்பீட்டுத் திட்டம் அறிமுகம்

உப்பு நீர் மற்றும் நன்னீரில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் மீனவ சமூகத்தினருக்கு வாழ்வாதாரமாக வேளாண்மை மற்றும் விவசாய காப்பீட்டு...

யாழ் சென்று சாட்சியமளிக்க தயார் – கோட்டாபய

2011 ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்ட இரண்டு மனித உரிமை ஆர்வலர்களான லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன்...

ஆசனப் பட்டி சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த நடவடிக்கை

எதிர்காலத்தில் ஆசனப் பட்டி சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சட்டம் பின்பற்றப்படாவிட்டால், உரிமங்களை இரத்து செய்ய...