follow the truth

follow the truth

May, 16, 2024
Homeஉள்நாடுமனித உரிமைகள் ஆணைக்குழு கந்தக்காடு பயணம்

மனித உரிமைகள் ஆணைக்குழு கந்தக்காடு பயணம்

Published on

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் இடம்பெற்ற மோதல் நிலை குறித்து விசாரணைகளை முன்னெடுப்பதற்காக, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணைக் குழு இன்று அங்கு செல்லவுள்ளது.

குறித்த மோதல் சம்பவம் தொடர்பிலும், தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒருவர் உயிரிழந்தமை தொடர்பிலும், விசாரணைகளை முன்னெடுப்பதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தை அடுத்து, அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களில் பெருமளவானோர் தப்பிச் சென்றிருந்தனர்.

இதையடுத்து, பாதுகாப்புத் தரப்பினர் முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கைகளில், 653 பேர் மீளவும் பொறுப்பேற்கப்பட்டதுடன், 70 பேர் தொடர்ந்தும் தேடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LATEST NEWS

MORE ARTICLES

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் பலத்த மழை

இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக மழை நிலைமை மேலும் தொடரும் என...

அரசாங்க நிர்வாக அதிகாரிகள் சட்டப்படி வேலை

சுமார் 18 சேவைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்க நிர்வாக அதிகாரிகள் சட்டப்படி வேலை செய்வதற்கான தொழில்முறை நடவடிக்கையை நேற்று (மே...

சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான தீர்மானம்

சுமார் 55 வயதிற்குப் பின்னர் சம்பளம் அல்லது ஓய்வூதியம் கிடைக்காத சிரமம் தொடர்பில் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் கவனம்...