follow the truth

follow the truth

May, 23, 2024
Homeஉள்நாடுஇராணுவ முகாம்களில் வைத்தியர்களுக்கு எரிபொருள் விநியோகம்

இராணுவ முகாம்களில் வைத்தியர்களுக்கு எரிபொருள் விநியோகம்

Published on

அருகில் உள்ள இராணுவ முகாம்களில் இருந்து வைத்தியர்களுக்கு எரிபொருள் விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதியும் அதற்கு இணக்கம் தெரிவித்ததாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எஸ்.ஹெட்டியாராச்சி குறிப்பிட்டார்.

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து வைத்தியர்களுக்கு எரிபொருள் விநியோகிக்கும் போது ஏற்படும் அமைதியின்மையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அத்தியாவசிய உணவுப்பொருட்களை ஏற்றிச்செல்லும் லொறிகள், பொருளாதார நிலையங்களுக்கு மரக்கறிகள் மற்றும் பழங்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு இராணுவ முகாம்களில் இருந்து எரிபொருளை விடுவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக செயலாளர் தெரிவித்தார்.

நுவரெலியா, கெப்பிட்டிபொல, தம்புளை, தம்புத்தேகம, மீகொட பொருளாதார மையங்களுக்கு அருகிலுள்ள இராணுவ முகாம்களிலிருந்து எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது.

இதனிடையே, இலங்கை போக்குவரத்து சபையின் சாலைகளூடாக தனியார் பஸ்கள், அம்பியூலன்ஸ்கள் மற்றும் சுற்றுலா பஸ்களுக்கான எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை

அரசாங்கத்தின் மதிப்பீட்டுப் பெறுமதிக்கு உட்பட்டே தனியார் துறையின் முதலீடுகளுக்காக அரச நிறுவனங்கள் வழங்கப்படும் எனவும் மதிப்பிடப்பட்ட தொகைக்கு குறைவான...

காலியில் தேசிய வைத்தியசாலை

கராபிட்டிய போதனா வைத்தியசாலையை நாட்டின் மூன்றாவது தேசிய வைத்தியசாலையாக மாற்றுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது...

மழை – காற்றுடன் கூடிய காலநிலை மேலும் தொடரும்

பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் முன்னெச்சரிக்கை அறிவித்தலை விடுத்துள்ளது. இது தொடர்பான அறிவித்தல் இன்று...