follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுஇலங்கையின் பொருளாதாரம் மரணத்தின் விளிம்பில் உள்ளது – அமெரிக்க பொருளாதார நிபுணர்

இலங்கையின் பொருளாதாரம் மரணத்தின் விளிம்பில் உள்ளது – அமெரிக்க பொருளாதார நிபுணர்

Published on

இலங்கையின் பொருளாதாரம் மரணத்தின் விளிம்பில் இருப்பதாக அமெரிக்க பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹான்கே தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ ருவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ள அவர், இலங்கையின் பணவீக்கம் தற்போது 122 வீதமாக உயர்ந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் கூட இலங்கைக்கான கடன் முறையை நிராகரித்துள்ளது என்றும் அந்த நிதியத்தால், இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காக 16 வேலைத்திட்டங்கள் தொகுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆனால் இலங்கை அதிகாரிகள் எவரும் அந்த வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேநேரம், உலகில் வருடமொன்றுக்கு அதிக பணவீக்கம் விகிதம் பதிவாகிய நாடுகளில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

Clean Sri Lanka என்பது எம் அனைவரினதும் lifestyle ஆக இருக்க வேண்டும்

ஒவ்வொரு அதிபரும் தமது பாடசாலையில் Clean Sri Lanka திட்டத்தை முழு நாட்டிற்கும் முன்னுதாரணமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும்,...

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புதிட்டம்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையில் முன்வைக்கப்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம்...

தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக இடமாற்றம்

இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர் நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஈரான் தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகத்தை...