follow the truth

follow the truth

May, 16, 2024
Homeஉள்நாடுபாராளுமன்றம் ஜூலை 27 ஆம் திகதி வரை ஒத்திவைப்பு

பாராளுமன்றம் ஜூலை 27 ஆம் திகதி வரை ஒத்திவைப்பு

Published on

பாராளுமன்றம் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பிற்காக இன்று காலை 10 மணிக்கு பாராளுமன்றம் கூடியது.

இன்று நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பில் பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு 134 வாக்குகளும்  பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவிற்கு 82 வாக்குகளும் அனுரகுமார திசாநாயக்கவிற்கு 3 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

இதன் அடிப்படையில், இலங்கையின் 8 ஆவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ரணில் விக்ரமங்க பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்தியதை அடுத்து, எதிர்க்கட்சித் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அழகப்பெரும, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க, தினேஷ் குணவர்தன உள்ளிட்டோரும் உரை நிகழ்த்தினர்.

இதனையடுத்து சபை நடவடிக்கைகள் நிறைவடைந்தன.

பாராளுமன்றம் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

LATEST NEWS

MORE ARTICLES

மீண்டும் மீண்டும் ஒத்திவைக்கப்படும் இந்தியா – இலங்கை கப்பல் சேவை

இந்தியா - இலங்கை இடையிலான கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த 13 ஆம்...

இலங்கையர்கள் தொடர்பில் ஆராய விசேட தூதுக்குழு ரஷ்யாவிற்கு

ரஷ்ய – உக்ரைன் போரின் தொடர்புபட்டிருக்கும் இலங்கையர்கள் குறித்து ஆராய்வதற்காக விசேட தூதுக் குழுவொன்றை ரஷ்யாவிற்கு அனுப்புமாறு ஜனாதிபதி...

உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் இம்மாதத்திற்குள்

கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகளை இம்மாதத்திற்குள் வெளியிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்...