follow the truth

follow the truth

May, 15, 2024
Homeஉள்நாடுஎரிபொருள் விநியோகத்திற்கான முறையான வேலைத்திட்டம் இல்லை - தனியார் பஸ் உரிமையாளர் சங்கம்

எரிபொருள் விநியோகத்திற்கான முறையான வேலைத்திட்டம் இல்லை – தனியார் பஸ் உரிமையாளர் சங்கம்

Published on

தனியார் பஸ்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்கான முறையான திட்டமொன்று இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் குற்றஞ்சுமத்தியுள்ளது.

பஸ்களுக்கான எரிபொருள் விநியோகத்திற்கு முறையான வேலைத்திட்டமொன்று இன்மையால், பஸ் போக்குவரத்தை முன்னெடுப்பதில் சிக்கல் நிலை காணப்படுவதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களை இன்று(21) இயன்றளவு சேவையில் ஈடுபடுத்த எதிர்பார்த்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், வழமையான நேர அட்டவணையின் படி ரயில் சேவைகளும் முன்னெடுக்கப்படும் என ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் தீர்மானம்

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பை இன்று (15) முதல் தீவிரப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த 13ஆம் திகதி அமைச்சரவைக்கு அனுப்பப்பட்ட...

விஜயதாச பற்றிய தீர்மானம் இன்று

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதற்கு தடை உத்தரவு இது வெளியிடப்பட்டதா? இல்லை? இந்த உத்தரவை...

சுகாதார தொழிற்சங்க பணிப்புறக்கணிப்பு வடமேற்கில்

மாகாண மட்டத்தில் உள்ள தாதியர்கள் உட்பட சுகாதாரத்துறையைச் சேர்ந்த 72 தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு இன்று (15) வடமேல்...