follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுமீண்டும் இவ்வாறான ஒரு நெருக்கடி ஏற்படாமல் இருக்க பணியாற்றுவோம் - அக்கிராசன உரையில்...

மீண்டும் இவ்வாறான ஒரு நெருக்கடி ஏற்படாமல் இருக்க பணியாற்றுவோம் – அக்கிராசன உரையில் ஜனாதிபதி

Published on

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது அமர்வு ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றினார்.

மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு ஆதரவளிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

தான் அனைத்து இலங்கையர்களுக்கும் ஜனாதிபதி என்றும், அனைவரதும் உரிமைகளையும் பாதுகாப்பதாக உறுதியளிப்பதாகவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

9ஆவது நாடாளுமன்றின் மூன்றாவது கூட்டத்தொடரில் ஜனாதிபதி தனது கொள்கை உரையிலேயே நிகழ்த்தும் போதே இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து  வெளியிட்ட அவர், இலங்கை இக்கட்டான நிலையில் இருக்கும் போது இந்தியா வழங்கி உதவியையும் ஜனாதிபதி இதன்போது நினைவுகூர்ந்தார்.

பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்த இலங்கைக்கு உயர்மூச்சு வழங்கிய இந்தியாவுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றி தெரிவிப்பதாக ஜனாதிபதி தனது கொள்கை உரையின் போது குறிப்பிட்டார்.

LATEST NEWS

MORE ARTICLES

சீரற்ற காலநிலை – வாகன சாரதிகளுக்கு விசேட அறிவிப்பு

கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் மழையுடனான காலநிலை அதிகரித்து வருவதால், வீதியில் மரங்களுக்கு கீழ் வாகனங்களை நிறுத்தும் போது...

கொழும்பில் 22 வெள்ள அபாய பகுதிகள் அடையாளம்

கொழும்பு மாவட்டத்தில் வெள்ள அபாய பகுதிகள் 22 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. வடிகால் அமைப்புகளின்...

கடவுச்சீட்டை ஒப்படைத்த டயானா கமகே

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தனது கடவுச்சீட்டை நீதிமன்ற உத்தரவிற்கு அமைய குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளிடம்...