follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடு'கோட்டா கோ கம' வில் எஞ்சியிருந்த கூடாரங்களும் அகற்றப்பட்டன

‘கோட்டா கோ கம’ வில் எஞ்சியிருந்த கூடாரங்களும் அகற்றப்பட்டன

Published on

கொழும்பு, காலிமுகத்திடல் ‘கோட்டா கோ கம’ போராட்டக்களத்தில் எஞ்சியிருந்த கூடாரங்கள் அனைத்தையும் பொலிஸ், விசேட அதிரடிப்படையினர் மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபையினர் இணைந்து அகற்றியுள்ளனர்.

கொழும்பு, காலிமுகத்திடல் ‘கோட்டா கோ கம’வில் இருந்து வெளியேறுவதாக போராட்டக்காரர்கள் கடந்த 10 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து அங்கு நிர்மாணிக்கப்பட்டிருந்த கூடாரங்கள், கொட்டகைகள் உள்ளிட்ட அனைத்துக் கட்டுமானங்களும் படிப்படியாகக் கழற்றப்பட்டு, அகற்றப்பட்டன.

இந்நிலையில், கோட்டா கோ கம போராட்டக்களத்தில் எஞ்சியிருந்த கூடாரங்கள் இன்று வெள்ளிக்கிழமை முழுமையாக அகற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LATEST NEWS

MORE ARTICLES

எலோன் மஸ்க் – ஜனாதிபதி சந்திப்பு

இந்தோனேஷியாவின் பாலி நகரில் இடம்பெறும் உலக நீர் மாநாட்டின் உயர்மட்ட கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எலோன் மஸ்க்கை...

“சுரக்ஷா” மாணவர் காப்புறுதியை மீண்டும் ஆரம்பிக்குமாறு பணிப்புரை

பொருளாதார நெருக்கடி காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள "சுரக்ஷா" மாணவர் காப்புறுதியை மீண்டும் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை...

கொழும்பில் சில வீதிகளுக்கு பூட்டு

15ஆவது இராணுவ நினைவு தின தேசிய நிகழ்வு இன்று பிற்பகல் நாடாளுமன்ற மைதானத்துக்கு அருகில் உள்ள இராணுவ நினைவுத்...