follow the truth

follow the truth

May, 17, 2024
Homeஉள்நாடுவசந்த முதலிகே உள்ளிட்ட மூவரிடம் CID விசாரணை

வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரிடம் CID விசாரணை

Published on

90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவின் அடிப்படையில், அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே, ஹஷாந்த குணதிலக்க மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோரை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் தடுத்து வைத்து விசாரணை செய்வதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தேசத்துரோக சதிகள் இடம்பெற்றுள்ளமை தொடர்பில் தெரியவந்தால், அவர்கள் மூவரையும் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் பயங்கரவாத தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்குமாறு பொலிஸ்மா அதிபரினால் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.

வசந்த முதலிகே, ஹஷாந்த குணதிலக்க மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோரை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுத்துவைத்து விசாரணை செய்வதற்கு பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (22) அனுமதி வழங்கியிருந்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

“அரசாங்கத்தின் பயணம் சரியில்லை. தீர்மானமொன்று எடுக்க வேண்டும்”

அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலை தாம் ஏற்றுக் கொள்ளவில்லை எனவும், அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு எதிராக நாட்டுக்காக எந்தவொரு தீர்மானத்தையும்...

டயானாவிடம் சிஐடி 5 மணி நேரம் விசாரணை

முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சர் டயானாவிடம் குற்றப் புலனாய்வுத் துறை 5 மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது. அவர் பயன்படுத்திய...

எல்ல – வெல்லவாய வீதி திறப்பு

தற்காலிகமாக மூடப்பட்டிருந்த எல்ல - வெல்லவாய வீதி போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. பொலிஸாரின் பூரண கண்காணிப்பின் கீழ் கடுமையான அவதானத்துடன்...