follow the truth

follow the truth

May, 18, 2024
Homeஉள்நாடுவிமானப்படை தயார் நிலையில்

விமானப்படை தயார் நிலையில்

Published on

நாட்டில் ஏற்பட்டுள்ள  சீரற்ற வானிலையால் ஏற்படக் கூடிய அவசர நிலைமைக்கு முகம் கொடுப்பதற்காக இலங்கை விமானப்படை தயார் நிலையில் உள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் தரவுகளுக்கு அமைய, இலங்கைக்கு அண்மித்த வளி மண்டலத்தில்  ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு காரணமாக இலங்கையின் பல பாகங்களிலும் கன மழை பெய்யவுள்ளதுடன், மண்சரிவு, வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

எனவே ஏற்படக் கூடிய இயற்கை அனர்த்தங்களில் இருந்து  மக்களைப் பாதுகாப்பதற்கு விமானப்படையினர் தயார் நிலையில் இருப்பதாக விமான படைத்தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன தெரிவித்துள்ளார்.

மேலும் அனர்த்த நிலைமைகள் குறித்து, விமானப்படையின் விமானங்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அனர்த்தங்கள் ஏற்படும் போது, மக்களை மீட்பதற்கும் நிவாரணங்களை வழங்கவும் விமானப்படையினர் ஹெலிகொப்டர்கள், சிறப்பு பயிற்சிப் பெற்ற விமானப்படையினர் தயார் நிலையில் உள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

இ-பாஸ்போர்ட் முறை அடுத்த சில மாதங்களில்

இலங்கையில் இ-பாஸ்போர்ட் முறையை அடுத்த சில மாதங்களில் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் திரான்...

வெள்ளம் ஏற்படும் அபாயம்

எதிர்வரும் நாட்களில் பலத்த மழை பெய்தால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக என நீர்ப்பாசன திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி,...

எல்ல – வெல்லவாய வீதிக்கு மீண்டும் பூட்டு

சீரற்ற காலநிலை காரணமாக எல்ல - வெல்லவாய பிரதான வீதியை இன்று (17) இரவு 8 மணி முதல்...