follow the truth

follow the truth

May, 22, 2024
Homeஉள்நாடுவிடுவிக்கப்படும் நிலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மீது புதிய வழக்குகள்?

விடுவிக்கப்படும் நிலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மீது புதிய வழக்குகள்?

Published on

விடுவிக்கப்படும் நிலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மீது புதிய வழக்குகள் தொடரப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கல நாதன் இன்று சபையில் தெரிவித்துள்ளார்.

இன்றும் சில அரசியல் கைதிகள் உண்ணாவிரதம் இருப்பதாக அறியக்கிடைத்தது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது அக்கிராசன உரையில், சிறையிலுள்ள அரசியல் கைதிகளின் விடுவிப்பு குறித்து தெரிவித்திருந்தார்.

அதற்கு பிந்திய எமது சந்திப்பிலும் அதனை அவர் உறுதி செய்திருந்தார். அரசியல் கைதிகளை விடுவிக்க ஆர்வமும் அவரிடத்தில் காணப்பட்டது.

எவ்வாறாயினும், வழக்கு தீர்க்கப்பட்டு பொதுமன்னிப்பில் அவர்களை விடுதலை செய்யக்கூடிய இயலுமை காணப்படுகின்ற போதிலும், அவர்கள் மீது புதிய வழக்குகள் தொடரப்படுகின்றன.

இவர்கள் சிறையிலேயே மரணிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இவ்வாறான வழக்குகள் தொடரப்படுகின்றனவா என்ற ஐயங்களும் தோற்றுகின்றன. எனவே, இது குறித்து ஜனாதிபதி உரிய அவதானம் செலுத்த வேண்டும் என்றார்.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளம் மாவட்ட பாடசாலைகளுக்கான அறிவிப்பு

வடமேல் மாகாணத்தின் புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (22) மீண்டும் திறக்கப்படும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக...

எக்ஸ்பிரஸ் பேர்ள் விபத்து நடந்து 3 வருடங்கள்

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்துக்குள்ளாகி இன்றுடன் (21) மூன்று வருடங்கள் பூர்த்தியாகின்றன. இதனால் வாழ்வாதாரத்தை பெற முடியாத நிலையில் உள்ள...

விஜயதாசவின் மனு மீண்டும் விசாரணைக்கு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக விஜயதாச ராஜபக்ஷவையும் பதில் செயலாளராக கீர்த்தி உடவத்தவையும் நியமித்தது சட்டவிரோதமானது என நாடாளுமன்ற...