follow the truth

follow the truth

May, 17, 2024
Homeஉள்நாடுபோபத்தலாவ தேசிய கால்நடைபண்ணையை தனியார்மயமாக்கும் திட்டத்திற்கு எதிராக போராட்டம்

போபத்தலாவ தேசிய கால்நடைபண்ணையை தனியார்மயமாக்கும் திட்டத்திற்கு எதிராக போராட்டம்

Published on

அரசுக்கு சொந்தமான போபத்தலாவ தேசிய கால்நடை பண்ணையை தனியார்மயமாக்கும் திட்டத்திற்கு எதிராக போராட்டம் ஒன்று இன்று இடம்பெற்றது.

போபத்தலாவ தேசிய கால்நடை பண்ணை வளாகத்திற்கு முன்பாக அங்கு பணிபுரியும் சுமார் 150ற்கும் மேற்பட்ட ஊழியர்களால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டத்தின் போது, போபத்தலாவ தேசிய கால்நடை பண்ணையை விற்பதை உடனே நிறுத்து, அரசாங்கமே இந்த பண்ணையை தொடர்ந்து நடத்த வேண்டும், இலாபத்தை ஈட்டிக்கொடுக்கும் பண்ணையை தனியாருக்கு விற்காதே என வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்திய வண்ணம், கோஷங்களை எழுப்பியவாறு போராட்டம் சுமார் இரண்டு மணித்தியாலயங்கள் முன்னெடுக்கப்பட்டது.

மேலும் இவ்வாறான நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டாம் எனவும், இந்த விடயத்தில் அரசாங்கம் தலையீட்டு, தொடர்ந்தும் அரசாங்கமே இந்த பண்ணையை நடத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

LATEST NEWS

MORE ARTICLES

டயானாவிடம் சிஐடி 5 மணி நேரம் விசாரணை

முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சர் டயானாவிடம் குற்றப் புலனாய்வுத் துறை 5 மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது. அவர் பயன்படுத்திய...

எல்ல – வெல்லவாய வீதி திறப்பு

தற்காலிகமாக மூடப்பட்டிருந்த எல்ல - வெல்லவாய வீதி போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. பொலிஸாரின் பூரண கண்காணிப்பின் கீழ் கடுமையான அவதானத்துடன்...

சாதாரண தரப் பரீட்சையின் புவியியல் தாள் தொடர்பிலும் விசாரணை

இந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் மாணவர்கள் குழுவிற்கு புவியியல் வினாத்தாளின் ஒரு பகுதியை...