follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுஜப்பானில் உயிரிழந்த இலங்கை பெண் : முழுமையான சிசிடிவி காணொளியை கோரும் குடும்பத்தினர்

ஜப்பானில் உயிரிழந்த இலங்கை பெண் : முழுமையான சிசிடிவி காணொளியை கோரும் குடும்பத்தினர்

Published on

தடுப்புக்காவலில் இருந்தபோது உயிரிழந்த இலங்கைப் பெண்பெண் விஷ்மாவின் இறுதி நாட்களைக் காட்டும் சிசிடிவி காணொளியின் ஒரு பகுதியை சமர்ப்பிக்குமாறு ஜப்பானின் நகோயா மாவட்ட நீதிமன்றம் அரசாங்கத்திடம் கோரியுள்ளது.

விசா காலாவதியான நிலையில் கடந்தவருடம் ஜப்பானின் நாகோயாவில் அமைந்துள்ள குடிவரவு தடுப்பு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 33 வயதான விஷ்மா எனப்படும் இலங்கைப் பெண்ணொருவர் மார்ச் 06 ஆம் திகதி உயிரிழந்தார்

அங்கு அவருக்கு வழங்கப்பட்ட உணவு குறித்து அவர் தொடர்ந்து முறைப்பாடு அளித்ததாகவும், அந்த உணவினால் அவர் பலவீனமடைந்து உயிரிழந்ததாகவும் ஆறு சந்தர்ப்பங்களில் மருத்துவர்கள் அந்தப் பெண்ணை பரிசோதித்ததாகவும், குறைந்தபட்சம் அவர் இரண்டு முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குடிவரவு அதிகாரி தெரிவித்ததாக தூதரக செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருந்தார்

இந் நிலையில் விஷ்மா இறப்பதற்கு முன்னர் அவரை தடுத்து வைத்திருந்த அறையில் உள்ள சிசிடிவியின் முழுமையான காணொளியை நீதிமன்றில் சமர்ப்பிக்க குடிவரவு அதிகாரிகளுக்கு உடனடியாக உத்தரவிட வேண்டும் என விஷ்மாவின் சகோதரி நீதிமன்றம் ஊடக  கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

நீதிமன்றத்தின் சமீபத்திய கோரிக்கைக்கு இணங்க வேண்டுமா என்பதை பரிசீலிப்பதாக ஜப்பான் அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது.

LATEST NEWS

MORE ARTICLES

பெரிய வெங்காயத்தின் மொத்த விலை குறைந்தது

சந்தையில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் மொத்த விலை 50 ரூபாவினால் குறைந்துள்ளது. இதனால் வெங்காய இறக்குமதியாளர்கள் பெரும் சிரமத்திற்கு...

ரைசி ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்தனர்

ஈரானிய ஜனாதிபதி, வெளியுறவு அமைச்சர் மற்றும் கிழக்கு அஜர்பைஜான் மாகாண கவர்னர் மாலெக் ரஹ்மதி உட்பட ஹெலிகாப்டரில் இருந்த...

தென்மேற்கு பருவமழை படிப்படியாக நாடு முழுவதும் வலுப்பெறுகிறது

தென்மேற்கு பருவமழை படிப்படியாக நாடு முழுவதும் நிலைபெற்று வருவதால், தற்போது நிலவும் மழை மற்றும் காற்றின் நிலை தொடரும்...