follow the truth

follow the truth

May, 18, 2024
Homeஉள்நாடுநாளை முதல் மீண்டும் திறக்கப்படும் நாடாளுமன்ற பார்வையாளர் கூடம்!

நாளை முதல் மீண்டும் திறக்கப்படும் நாடாளுமன்ற பார்வையாளர் கூடம்!

Published on

நாடாளுமன்றில் பொதுமக்கள் பார்வையாளர் கூடம் நாளை முதல் திறக்கப்படவுள்ளதாக படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

குறிப்பாக,கொவிட்-19 நிலைமை மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காகப் நாடாளுமன்றை பார்வையிட இதுவரை விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது தொடர்பில் படைக்கல சேவிதரினால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவு நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவினால் கடந்த 14ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இதற்கமைய முதற்கட்டமாக நாடாளுமன்ற அமர்வு தினங்கள் தவிர்ந்த ஏனைய நாட்களில் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட நாடாளுமன்றத்தை பார்வையிட விரும்பும் தரப்பினருக்கு அனுமதியை வழங்க இணக்கம் காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நாளைய தினம் முதல் அமுலுக்கு வரும் வகையில் பாடசாலை மாணவர்கள் நாடாளுமன்றக் கட்டடத்தொகுதிக்கு வருகைதர முடியும்.

இதற்கமைய, முற்பகல் 9.30 முதல் பிற்பகல் 3 மணிவரை அனுமதிக்கப்படுவார்கள் என நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்தார்.

அத்துடன், நாடாளுமன்றுக்கு பிரவேசிப்பதற்கான விண்ணப்பங்களை www.parliament.lk என்ற இணையத்தளத்துக்கு பிரவேசிப்பதன் மூலம் 011 2777 473, 011 2777 335 என்ற தொலைநகல் இலக்கங்கள் ஊடாகவும் சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக,பல்கலைக்கழகங்களின் மாணவர் குழுக்கள், அரசின் கீழ் பதிவுசெய்யப்பட்ட உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் இந்த வசதியைப் பெற்றுக் கொள்ளலாம் என படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது .

LATEST NEWS

MORE ARTICLES

இந்தோனேசியா பயணமானார் ஜனாதிபதி

இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெறும் 10 ஆவது உலக நீர் மாநாட்டின் உயர்மட்டக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில்...

யாழில் நாய் இறைச்சி : கடைக்கு சீல்

யாழ்ப்பாணத்தில் உள்ள தெல்லிப்பளை எனும் குறிப்பிட்ட உணவகம் மாட்டிறைச்சிக்கு பதிலாக நாய் இறைச்சியை வழங்கியமையால் தரமற்ற உணவு என்ற...

அடுத்து சில தினங்களுக்கு மழையுடனான வானிலை

இலங்கையையும் இலங்கையைச் சூழவுள்ள ஏனைய கடற் பிராந்தியங்களில் தென்மேல் பருவப்பெயர்ச்சிக்கு முன்னரான நிலைமை காரணமாக இன்று (18) முதல்...