follow the truth

follow the truth

May, 19, 2025
Homeஉள்நாடுஅரச வாகனங்களை அனுமதியின்றி பயன்படுத்தியமை தொடர்பில் இரண்டு எம்.பி.க்களின் பெயர்கள் வெளியானது!

அரச வாகனங்களை அனுமதியின்றி பயன்படுத்தியமை தொடர்பில் இரண்டு எம்.பி.க்களின் பெயர்கள் வெளியானது!

Published on

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் தமது உத்தியோகபூர்வ அரச வாகனங்களை மீள ஒப்படைக்கத் தவறியமைக்காக அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஜனாதிபதி செயலகம் பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் K.P.S என்பவரிடம் இருந்து சொகுசு Land Cruiser ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லலித் எல்லாவலவிடமிருந்து  Toyota Hilux கெப் வண்டியொன்றையும் ஜனாதிபதி செயலகம் கைப்பற்றியதாக குறித்த ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் பயன்படுத்திய Toyota Land Cruiser மற்றும் Toyota Hilux Cab ஆகிய இரு வாகனங்களின் சந்தை மதிப்பு சுமார் ரூ. 50 மில்லியன்.

பாராளுமன்ற உறுப்பினர்களான குமாரசிறி மற்றும் லலித் எல்லாவல ஆகியோர் தமது பொதுப்பணிகளை மேற்கொள்வதற்காக வாகனங்களை கோரியதையடுத்து முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த வாகனங்களை ஜனாதிபதி செயலகத்தில் இருந்து விடுவித்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மிலான் ஜயதிலக்கவை பிணையில் விடுவிக்க உத்தரவு

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக்கவை பிணையில் விடுவிக்க...

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் ‘iPhone’ சமாச்சாரம்

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தரவு அறிக்கைகள் மற்றும் இரகசியத் தகவல்கள் பகிரங்கப்படுத்தப்படும் அபாயம் இருப்பதாகவும், இதன் காரணமாக, புதிய...

மஹிந்தானந்தவுக்கு விளக்கமறியல்

முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான்...