follow the truth

follow the truth

May, 19, 2025
Homeஉள்நாடுதீயால் வீடுகளை இழந்தவர்கள் நிர்க்கதி (படங்கள்)

தீயால் வீடுகளை இழந்தவர்கள் நிர்க்கதி (படங்கள்)

Published on

தலவாக்கலை – ஹொலிறூட் ஈஸ்ட் பிரிவு தோட்டத்தில் உள்ள லயக்குடியிருப்பில் 2019 ஆம் ஆண்டு ஏற்பட்ட தீ பரவல் காரணமாக 24 வீடுகளைக் கொண்ட குறித்த லயக் குடியிருப்பு முற்றாக எரிந்து தீக்கிரையானது.

இதனால் 24 குடும்பங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு நிர்க்கதியாகினர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் தோட்டத்தில் உள்ள பொது கலாசார மண்டபத்தில் எவ்வித அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் தங்க வைக்கப்பட்ட நிலையில்,தொடர்ந்தும் மூன்று வருடங்களாக அக்கலாசார மண்டபத்தில் பல்வேறு அசௌகரிங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களுக்கான புதிய வீட்டுத் திட்டத்துக்கான அடிக்கல்லானது, 2021 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நாட்டப்பட்டு பணிகளும் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

வீடமைப்பு பணிகள் துரிதமாக ஆரம்பிக்கப்பட்ட போதிலும் தற்போது அதன் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

எனினும் பொது கலாசார மண்டபத்தில், சேலைகள், பெட்சீட்டுகளால் மறைத்து, பலர் வாழத் தொடங்கியுள்ளனர்.

எனவே, உடனடியாக தமது வீடுகளை முழுமைப்படுத்தி தருமாறு, பாதிக்கப்பட்ட மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.

No description available.

No description available.

No description available.

No description available.

No description available.

No description available.

(க.கிஷாந்தன்)

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மஹிந்தானந்தவுக்கு விளக்கமறியல்

முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான்...

தெஹிவளையில் துப்பாக்கிச்சூடு

தெஹிவளை - நெதிமாலை பகுதியில் உள்ள ஒரு கடையில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். எந்தவொரு...

மிலான் ஜயதிலக்க கைது

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது...