follow the truth

follow the truth

May, 18, 2024
Homeஉள்நாடுபெரும்போகத்துக்குத் தேவையான உரங்களை வழங்க நடவடிக்கை

பெரும்போகத்துக்குத் தேவையான உரங்களை வழங்க நடவடிக்கை

Published on

பெரும்போகத்துக்குத் தேவையான உரங்களை உரிய நேரத்தில் போதுமான அளவில் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேவையான உரங்களைக் கொள்வனவு செய்வதற்கு முன்பதிவு செய்யப்படுள்ளதாகவும் எதிர்காலத்தில் அவற்றை விவசாயிகளுக்கு விநியோகம் செய்ய தயார் நிலையிலிருப்பதாகவும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

பெரும்போகத்துக்குத் தேவையான உரங்களை வழங்குவது குறித்து ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தலைமையில் நேற்று முன்தினம் 29 ஆம் திகதி ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் இராஜாங்க அமைச்சர் மொஹான் பிரியதர்ஷன டி சில்வா ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், பெரும்போகத்தில் நெற்செய்கை மற்றும் ஏனைய விவசாய பயிர்ச் செய்கைக்குத் தேவையான சேதன மற்றும் இரசாயன உரங்களை வழங்குவது தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது. இதற்கமைய, விவசாயிகள் எவ்வித சந்தேகமுமின்றி அடுத்த பெரும்போகத்தில் பயிர்ச் செய்கையை ஆரம்பிக்க முடியும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய உணவுப் பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி சுரேன் படகொட, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க மற்றும் விவசாய அமைச்சின் செயலாளர் உட்பட அரசாங்க அதிகாரிகள், ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி மற்றும் இந்திய கடன் திட்டத்தின் பிரதிநிதிகள், உணவு மற்றும் விவசாய அமைப்பின் அதிகாரிகள் பலர் இக்கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.

LATEST NEWS

MORE ARTICLES

பல பகுதிகளில் நாளையும் கடும் மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் நாளை...

வெள்ளவத்தையில் நினைவேந்தலில் ஈடுபட்டவர் கைது

வெள்ளவத்தை பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொண்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இன்று காலை வெள்ளவத்தை கரையோரப் பகுதியில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன....

மது, போதைப்பொருள் போன்றவற்றை ஊக்குவிக்கும் ஒரு யுகம் உருவாகியுள்ளது

அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டாலும், மது, போதைப்பொருள் மற்றும் சிகரெட் போன்றவற்றை ஊக்குவிக்கும்...