follow the truth

follow the truth

May, 16, 2024
Homeஉள்நாடுசீனாவிடம் இருந்து 2000 வீடுகள்!

சீனாவிடம் இருந்து 2000 வீடுகள்!

Published on

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் குறைந்த வசதிகள் கொண்ட குடியேற்றத் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு ஆலோசனை வழங்கினார்.

திறைசேரிக்குச் சுமை ஏற்படுத்தாமல் திட்டங்களைச் செயல்படுத்துவதற்குத் தேவையான நிதியைப் பெறுவதற்கு மாற்று வழிகளைக் கடைப்பிடிக்குமாறும் அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.

ஆசிய உட்கட்டமைப்பு மற்றும் முதலீட்டு வங்கியின் கடன் உதவியுடன் 5500 வீடுகளை நிர்மாணிக்க முன்மொழியப்பட்டுள்ளது. 4074 அடுக்குமாடிக் குடியிருப்புக்களின் நிர்மாணப் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

மேலும் குறைந்த வருமானம் கொண்ட கலைஞர்களுக்கான வீட்டுத் திட்டங்கள் சீனக் குடியரசின் மானியமாகப் பெறப்படும் 552 மில்லியன் யுவான் தொகையைப் பயன்படுத்தி செயல்படுத்தப்படும்.

அந்தத் திட்டத்தின் கீழ் பேலியகொட, மொரட்டுவை, தெமட்டகொட, மஹரகம மற்றும் கொட்டாவ ஆகிய பிரதேசங்களில் 2000 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் அரச மற்றும் தனியார் துறைகளின் பங்களிப்பின் கீழ் குறைந்த வசதிகள் கொண்ட குடியேற்றங்களுக்கான வீடமைப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன் நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான வீடுகளை டொலர்கள் மூலம் விற்பனை செய்யும் அரசாங்கத்தின் வேலைத் திட்டத்தின் கீழ் வீடுகளை விற்றுக் கிடைக்கும் பணத்தை வீடமைப்பு நிர்மாணத் திட்டங்களுக்கு பயன்படுத்தவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும்வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் பலத்த மழை

இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக மழை நிலைமை மேலும் தொடரும் என...

அரசாங்க நிர்வாக அதிகாரிகள் சட்டப்படி வேலை

சுமார் 18 சேவைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்க நிர்வாக அதிகாரிகள் சட்டப்படி வேலை செய்வதற்கான தொழில்முறை நடவடிக்கையை நேற்று (மே...

சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான தீர்மானம்

சுமார் 55 வயதிற்குப் பின்னர் சம்பளம் அல்லது ஓய்வூதியம் கிடைக்காத சிரமம் தொடர்பில் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் கவனம்...