follow the truth

follow the truth

May, 24, 2025
Homeஉலகம்வாசனை திரவிய விற்பனையாளராக மாறிய எலான் மஸ்க்!

வாசனை திரவிய விற்பனையாளராக மாறிய எலான் மஸ்க்!

Published on

டெஸ்லா வாகனங்கள், ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி நிறுவனம் என பல வழிகளில் வருமானம் ஈட்டி உலக அளவில் நம்பர் ஒன் பணக்காரராக திகழும் எலான் மஸ்க், தற்போது தனது அடுத்த வணிகப் பயணத்தை இன்று அதிகாரப்பூர்வமாக துவக்கியுள்ளார்.

இந்த முறை புதிய வாசனை திரவியம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார் எலான் மஸ்க். தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வாசனைத் திரவியத்தை அறிமுகப்படுத்தியுள்ள எலான் மஸ்க், இந்த திரவியத்திற்கு எரிந்த முடி (பர்ன்ட் ஹேர் – Burnt Hair) என்று பெயரிட்டுள்ளார். “பூமியின் சிறந்த வாசனை!” என்று தனது இந்த வாசனை திரவியம் குறித்து தனி பதிவை வெளியிட்டுள்ளார்.

தன்னைப் போன்றவர்கள் வாசனைத் திரவிய தொழிலில் இறங்குவது தவிர்க்க முடியாதது என்று ட்விட்டரில் எலான் மஸ்க் பதிவிட்டுள்ளார். ட்விட்டரில் வாசனை திரவியத்தை அறிமுகப்படுத்திய சில நிமிடங்களிலேயே 10 ஆயிரம் பாட்டில்ல்கள் விற்று தீர்ந்துவிட்டதாக எலான் மஸ்க் அறிவிப்பை வெளியிட்டார்.

மேலும் தனது ட்விட்டர் பயோவை “வாசனை திரவிய விற்பனையாளன் (Perfume Salesman)” என்று மாற்றி விட்டார் எலான் மஸ்க். இந்த வாசனை திரவியத்தை கிரிப்டோ கரன்சியை பயன்படுத்தியும் வாங்கலாம் என்று மஸ்க் தெரிவித்துள்ளார்.

எலான் மஸ்க் அறிமுகப்படுத்திய இந்த வாசனைத் திரவியம் அடங்கிய ஒரு பாட்டிலின் விலை 100 டாலர்கள்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஹார்வர்டு பல்கலையில் வெளிநாட்டு மாணவர்களுக்கு தடை விதித்த டிரம்ப்

ஹார்வர்ட் பல்கலைகழகம் வெளிநாட்டு மாணவர்களை சேர்ப்பதை தடுக்கும் நடவடிக்கையை டிரம்ப் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. டிரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு...

காஸாவை சென்றடைந்த சொற்ப உதவி – பற்றாக்குறையை ஈடுசெய்ய இது போதுமானதாக இல்லை

கடும் விமர்சனங்களை எதிர்கொண்ட பிறகு, இஸ்ரேல் காஸாவுக்குள் சில மனிதாபிமான உதவி லாரிகளை அனுமதித்தது. இதையடுத்து, வியாழக்கிழமை காஸாவின் சில...

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் வரலாறு காணாத மழை வெள்ளம்

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்த மழையால் கட்டுக்கடங்காத...