follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுகோதுமை மாவின் விலை குறைப்பு!

கோதுமை மாவின் விலை குறைப்பு!

Published on

சந்தையில் கோதுமை மாவின் விலை தற்போது குறைவடைந்துள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய தற்போது ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விலை 290 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 25 கிலோகிராம் நிறையுடைய கோதுமை மா மூடை ஒன்றின் விலை 7 ஆயிரத்து 250 ரூபாவாகும் அவர் தெரிவித்துள்ளார்.

கோதுமை மா இறக்குமதி செய்யப்பட்டுள்ளதன் காரணமாக, இவ்வாறு விலை குறைவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் ஒரு கிலோகிராம் கோதுமை மா 300 ரூபாய் முதல் 400 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட்டது என்பதுக் குறிப்பிடத்தக்கது.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...