follow the truth

follow the truth

May, 18, 2024
Homeஉள்நாடுபார்வையற்றோர் பிரச்சினைகளைத் தீர்க்க ஜனாதிபதி அலுவலகம் முழுமையான ஆதரவை வழங்கும்!

பார்வையற்றோர் பிரச்சினைகளைத் தீர்க்க ஜனாதிபதி அலுவலகம் முழுமையான ஆதரவை வழங்கும்!

Published on

பார்வையற்றோர் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்க்க ஜனாதிபதி அலுவலகம் முழுமையான ஆதரவை வழங்கும் என்று ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்தார்.

சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு இன்று (17) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து கொடி அணிவிக்கப்பட்டது.

No description available.

ஜனாதிபதி அலுவலக செலவில் பார்வையற்றோருக்கு 300 வெள்ளை பிரம்புகளைக் கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் உரையாற்றிய ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பார்வையற்றோர் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்க்க முழுமையான ஆதரவை வழங்குவதாகத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய பார்வையற்றோர் தேசிய சங்கத்தின் செயலாளர் பிரசன்ன விக்ரமசிங்க, இந்த சங்கம் அனைத்து மாகாணத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
இதேவேளை, பெண்களுக்கான மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் ஒரு கிளையாக பார்வையற்ற பெண்களின் சங்கமும் மாற்றுத்திறனையுடைய இளைஞர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க இளைஞர் சங்கமும் இயங்கி வருவதாக அவர் இதன்போது குறிப்பிட்டார்.

No description available.

இலங்கை தேசிய பார்வையற்றோர் சங்கத்தின் தலைவர் கமல்சிறி நாணயக்கார மற்றும் சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் குழுவினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

LATEST NEWS

MORE ARTICLES

அடுத்து சில தினங்களுக்கு மழையுடனான வானிலை

இலங்கையையும் இலங்கையைச் சூழவுள்ள ஏனைய கடற் பிராந்தியங்களில் தென்மேல் பருவப்பெயர்ச்சிக்கு முன்னரான நிலைமை காரணமாக இன்று (18) முதல்...

இ-பாஸ்போர்ட் முறை அடுத்த சில மாதங்களில்

இலங்கையில் இ-பாஸ்போர்ட் முறையை அடுத்த சில மாதங்களில் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் திரான்...

வெள்ளம் ஏற்படும் அபாயம்

எதிர்வரும் நாட்களில் பலத்த மழை பெய்தால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக என நீர்ப்பாசன திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி,...