follow the truth

follow the truth

May, 16, 2024
HomeUncategorizedபொருளாதார நெருக்கடி தொடர்ந்தால் வர்த்தக துறையினருக்கு மோசமான பாதிப்பு!

பொருளாதார நெருக்கடி தொடர்ந்தால் வர்த்தக துறையினருக்கு மோசமான பாதிப்பு!

Published on

இலங்கையில் தற்போது காணப்படும் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்தால் அல்லது தொடர்ந்து நீடித்தால் இலங்கையின் வர்த்தக துறை மோசமான பாதிப்புகளை எதிர்கொள்ளவேண்டி வரும் என Fitch Ratings  தெரிவித்துள்ளது.

அதிகரிக்கும் பணவீக்கம் அதிகரிக்கப்பட்ட வட்டி வீதங்கள் இறக்குமதி கட்டுப்பாடுகள் இலங்கையின் வர்த்தக சமூகத்தின் வருமானம் இலாபம் போன்றவற்றில் ஏற்கனவே பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன எனவும் Fitch Ratings தெரிவித்துள்ளது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடி பங்குசந்தையில் இடம்பெற்றுள்ள நிறுவனங்களிற்கு ஏற்படுத்தக்கூடிய பாதிப்பு குறித்து Fitch Ratings அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

தற்போதைய நிலை தொடர்ந்தால் நுகர்வோர் பொருட்களின் சில்லறை விற்பனை துறையினர் மின் உற்பத்தி வீட்டு கட்டுமானம் போன்ற துறைகள் நீண்ட கால நெருக்கடியால் பாதிக்கப்படும் இந்த நிலை 12 முதல் 18 மாதங்கள் வரை நீடிக்கும் எனவும் Fitch Ratingsதெரிவித்துள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

மீண்டும் Race The Pearl – சர்வதேச போட்டியாளர்களுடன் 24 மணிநேர சைக்கிளோட்டம்

சுருக்கம் உலகப்புகழ் பெற்ற Tour De France இன் வெற்றியாளரும், RAAM இன் போட்டியாளரும் பங்கேற்கும் 24 மணிநேர சைக்கிள்...

கண் நோய் தொடர்பில் சுகாதார திணைக்களத்தின் அறிவித்தல்

கண் நோய்களில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு சுகாதாரத் துறை மக்களுக்கு அறிவுறுத்துகிறது. இந்த...

பேருந்தில் பெண் ஒருவர் மீது துப்பாக்கி சூடு

ஹம்பலாந்தோட்டை - மடயமலந்த பகுதியில் பேருந்து ஒன்றில் பயணித்த பெண் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த...