follow the truth

follow the truth

May, 17, 2024
Homeஉள்நாடுதமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமையக திறப்பு விழாவில் ஜீவன் பங்கேற்பு

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமையக திறப்பு விழாவில் ஜீவன் பங்கேற்பு

Published on

அட்டன், டிக்கோயா, என்பீல்ட், ஒட்டரி பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமையகக் கட்டிடத் தொகுதியான “தாயகம்” இன்று (30.10.2022) ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தலைமையில் இடம்பெற்ற இந்தத் திறப்பு விழாவில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச பிரதம அதிதியாக கலந்து கொண்டார். விசேட அதிதிகளாக இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே, கண்டி இந்திய உதவி உயர்ஸ்தானிகர் திருமதி. ஆதிரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

சிறப்பு அதிகளாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவர்களான பழனி திகாம்பரம் எம்பி, வி. இராதாகிருஷ்ணன் எம்பி, தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான வேலு குமார், உதயகுமார் மற்றும் பொதுச் செயலாளர் சந்திரா சாப்டர், தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிதி செயலாளரும், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மலையக மக்கள் நலன் கருதி தமிழ் முற்போக்கு கூட்டணி முன்னெடுக்கின்ற அரசியல் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையிலும், மக்களுக்கான விழிப்புணர்வு நடவடிக்கைகள், கல்வி நடவடிக்கைகள் மற்றும் வினைதிறனான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காகவும் இந்த தலைமை கட்டிடம் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

LATEST NEWS

MORE ARTICLES

“அரசாங்கத்தின் பயணம் சரியில்லை. தீர்மானமொன்று எடுக்க வேண்டும்”

அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலை தாம் ஏற்றுக் கொள்ளவில்லை எனவும், அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு எதிராக நாட்டுக்காக எந்தவொரு தீர்மானத்தையும்...

டயானாவிடம் சிஐடி 5 மணி நேரம் விசாரணை

முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சர் டயானாவிடம் குற்றப் புலனாய்வுத் துறை 5 மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது. அவர் பயன்படுத்திய...

எல்ல – வெல்லவாய வீதி திறப்பு

தற்காலிகமாக மூடப்பட்டிருந்த எல்ல - வெல்லவாய வீதி போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. பொலிஸாரின் பூரண கண்காணிப்பின் கீழ் கடுமையான அவதானத்துடன்...