மலையகத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக மஹாவலி கங்கையின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளதால் பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இன்று (06) அதிகாலை முதல் இந்த வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் பொறியியலாளர் அதுல புஷ்பகுமார தெரிவித்தார்.
எனவே இந்த நீர்த்தேக்கத்தை அண்மித்த பகுதிகளில் தாழ்நிலப்பகுதிகளில் வசிப்பவர்கள் அவதானத்துடன் இருக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.